கார்களின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு?

நேற்று முன்தினம் (20) முன்வைக்கப்பட்ட 2016 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின்படி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
 
அதன் படி அச்சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மேரன்சிக்கே இது பற்றி தெரிவிக்கையில், மின்சாரக் கார்கள் ரூபா 25 இலட்சத்தினாலும், ஹய்ப்ரிட் ரூபா 4 இலட்சத்தினாலும், மினி கெப் வண்டி ரூபா 10 இலட்சத்தினாலும், மாருதி கார்கள் ரூபா 2 இலட்சத்தினாலும் அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுவதாக தெரிவித்தார்.
 
அத்துடன் இறக்குமதி செய்யபடும் முச்சக்கர வண்டிகளின் விலை ரூபா 1 இலட்சத்தினால் அதிகரிக்கும் என அச்சங்கம் தெரிவித்துள்ளது.

Add new comment

Or log in with...