பட்ஜட்: அணைக்கட்டு உடைந்து ஏற்படுத்தும் அழிவு

அரசாங்கம் முன்வைத்திருக்கும் வரவுசெலவுத்திட்டமானது அணைக்கட்டை உடைத்துக்கொண்டு பாய்ந்துசெல்லும் நீர் பாரிய அழிவை ஏற்படுத்திச் செல்வதுபோன்று அமைந்துள்ளது என எதிர்க்கட்சிப் பிரதம கொரடாவும், ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். காணிச் சந்தைக்கு இலங்கையின்

நிலத்தை முழுமையாக விற்பனை செய்வதற்கான வாய்ப்புக்கள் இதன்மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டவர் களுக்கு காணிகளை விற்பனை செய்வதற்கான சட்டங்கள் நீக்கப்பட்டு மற்றும் அவர்களுக்கான வரிகளை நீக்கி நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கு வதற்கான யோசனைத் திட்டங்களே வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப் பட்டிருப்பதாக அவர் கூறினார்.

வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

இந்த யோசனைகள் ஒருபோதும் நாட்டை புதியதொரு திசைக்கோ அல்லது புதியதொரு ஸ்தானத்துக்கோ கொண்டு செல்லப்போவதில்லை. மீனவர்கள், விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்குப் பதிலாக நாட்டின் பொருளாதாரத்தை தொல்பொருள் முக்கியத்துமான இடத்துக்குக் கொண்டு செல்லும் வகையிலேயே இது தயாரிக்கப்பட்டுள்ளது.

வரவுசெலவுத் திட்டத்தில் உள்ள விடயங்களை தனித்தனியாகப் பார்க்கும்போது சிறுசிறு நல்ல விடயங்கள் காணப்படுகின்றபோதும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை ஒரு அங்குலத்துக்கேனும் நகர்த்துவதற்கான திட்டங்கள் உள்ளடக்கப்படவில்லை என்றும் கூறினார்.

எம்.எஸ்.பாஹிம், மகேஸ்வரன் பிரசாத் 


Add new comment

Or log in with...