மேலும் 17 தொற்றாளர்கள் அடையாளம்

மேலும் 17 கொவிட்-19 தொற்றாளர்கள் இன்று (14) அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள 17 பேரும், மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணியைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்களில் 5 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, ஏனைய 12 பெரும் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களாவர்.

இதற்கமைய, மினுவாங்கொடை கொவிட்-19 கொத்தணியில் இதுவரையில் 1,608 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PDF File: 

Add new comment

Or log in with...