மேலும் 49 ஆடைத் தொழிற்சாலை தொற்றாளர்கள் அடையாளம்

மேலும் 49 கொவிட்-19 தொற்றாளர்கள் இன்று (13) அடையாளம் காணப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள 49 பேரும் மினுவாங்கொடை கொவிட் கொத்தணியைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்களில் 32 பேர், தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் என்பதோடு, ஏனைய 17 பேரும் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களாவர்.

இதற்கமைய, மினுவாங்கொடை கொவிட் கொத்தணியில் 1,446 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

PDF File: 

Add new comment

Or log in with...