அர்ஜுன் மஹேந்திரன் நாடு திரும்பினார்

 

றிஸ்வான் சேகு முகைதீன்

மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார்.

சிங்கப்பூரில் இடம்பெற்ற திருமண வைபவமொன்றுக்கு சென்றிருந்த அவர், இன்று (03) பிற்பகல் 4.20 மணியளவில் இலங்கை வந்தடைந்தார்.

மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட முறி (Bond) விவகாரம் தொடர்பில் ஊழல் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்து, பாராளுமன்ற கோப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததோடு, இது தொடர்பில் முழுப் பொறுப்பும் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அர்ஜுன் மஹேந்திரனையே சாரும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பில் தான் நிரபராதி என நிரூபிப்பேன் என அர்ஜுன் மஹேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மத்திய வங்கி முறி தொடர்பில் இடம்பெற்ற முறைகேடு தொடர்பிலான விசாரணை எவ்வித அரசியல் தலையீடும் இன்றி இடம்பெறும் என, சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ட்விற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளதோடு, குறித்த விசாரணைகள் யாவும் சுயாதீனமாகவும் எவ்வித பக்கச்சார்புமின்றியும் இடம்பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

 

 


Add new comment

Or log in with...