ஏப்ரல் 30 முதல் பொது இடங்களில் முழுமையான தடுப்பூசி இன்றி நுழைய முடியாது

ஏப்ரல் 30 முதல் பொது இடங்களில் முழுமையான தடுப்பூசி இன்றி நுழைய முடியாது-COVID-19 Vaccination-Public Places-Extraordinary Gazette

- அதி விசேட வர்த்தமானி வெளியீடு
- மேலதிக அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை விரைவில்

முழுமையாக தடுப்பூசி பெறாதவர்களை பொது இடங்களுக்கு நுழைவதை தடுக்கும் (காலத்திற்கு காலம் திருத்தப்படும்) அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் இவ்வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஏப்ரல் 30 முதல் இவ்வுத்தரவு அமுலுக்கு வருவதாக குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டு, காலத்துக்கு காலம் திருத்தப்பட்டு வரும் குறித்த அதி விசேட வர்த்தமானி இவ்வாறு மீண்டும் திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.தடுப்

பொது இடங்கள் மற்றும் முழுமையான தடுப்பூசி, வயதெல்லை, தடுப்பூசி ஏற்றலில் இருந்து விலக்களிப்பு தொடர்பான வரையறைகள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்படுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய அது தொடர்பான சுற்றறிக்கைகள் விரைவில் வௌியிடப்படுமென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார்.

PDF File: 

Add new comment

Or log in with...