2021 பட்ஜெட் விவாதம் 21 நாட்கள்

2021 வரவுசெலவுத்திட்ட விவாதம் 21 நாட்கள் இடம்பெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (12) பாராளுமன்றத்தில் அறிவித்தார். நேற்று முன்தினம் (11) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் வரவுசெலவுத்திட்ட விவாதத்துக்கான தினங்கள் தீர்மானிக்கப்பட்டன.

வரவுசெலவுத்திட்ட விவாதங்கள் 19 தினங்கள் நடைபெறும் என   பாராளுமன்றத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டமையால், இன்றைய நாளிதழ்கள் சிலவற்றில் இது பற்றி தவறாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய சபாநாயகர் அதனால் இந்த அறிவிப்பை விடுப்பதாக கூறினார். வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் தினம் உள்ளிட்டதாக 21 நாட்கள் விவாதம் நடைபெற உள்ளது.

-சபை நிருபர்கள்


Add new comment

Or log in with...