கிராண்ட்பாஸ், நாகலகம் வீதி தனிமைப்படுத்தலில்

கிராண்ட்பாஸ், நாகலகம் வீதி தனிமைப்படுத்தலில்-Grandpass Nagalagama Isolated-COVID19

கொழும்பு, கிராண்ட்பாஸ், நாகலகம் வீதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று (16) முற்பகல் முதல் அமுலாகும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுதுவெல்ல பகுதியில் இருந்து அடையாளங்காணப்பட்ட போதைப்பொருளுடன் தொடர்புள்ள கொரோனா தொற்றிய நபர்களுடன் பழகிய சிலருக்கு கொரோனா தொற்றியது உறுதியானது.

இவர்கள் இந்த பிரதேசங்களுக்கு வந்து சென்றுள்ளதாக தகவல் கிடைத்ததை அடுத்து இப்பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட, 14,234 பேரில் 7,202 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாகவும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் 11,631 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு இது வரை 3,721 பேர் தனிமைப்படுத்தலின் பின்னர் வீடு திரும்பியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (பா)

எம்.எஸ். பாஹிம்


Add new comment

Or log in with...