சங்கக்கார, அரவிந்த உள்ளிட்ட புதிய தேர்வுக் குழு

இலங்கை கிரிக்கெட் சபைக்கு உடனடியாக அமுலாகும் வகையில் புதிய தேர்வுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
 
அண்மையில் இடம்பெற்ற, நியூசிலாந்து, இந்தியா மற்றும் ஆசியா கிண்ண தொடர்களில் இலங்கை அணி சோபிக்க தவறியமை தொடர்பில் கருத்திற்கொண்டு, விளையாட்டு அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதன் அடிப்படையில் ஐவரைக் கொண்ட புதிய குழு வருமாறு:
 
1. அரவிந்த டி சில்வா - தலைவர்
2. குமார் சங்கக்கார - உறுப்பினர்
3. ரோமேஷ் களுவிதாரண - உறுப்பினர்
4. லலித் களுபெரும - உறுப்பினர்.
5. ரஞ்சித் மதுரசிங்க - உறுப்பினர்
 

[[{"type":"media","view_mode":"media_original","fid":"11029","attributes":{"alt":"","class":"media-image","height":"350","typeof":"foaf:Image","width":"673"}}]]

ரொமேஷ் களுவிதாரண, லலித் களுபெரும, ரஞ்சித் மதுரசிங்க

 
இன்றைய தினம் (08) ரி20 உலக கிண்ணம் ஆரம்பிக்கின்ற நிலையில் குறித்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதோடு, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட அணிக்கு பதிலாக இன்றைய தினம் புதிய அணி ஒன்று அறிவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
அத்துடன், உலக கிண்ண போட்டிகளில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி இன்றைய தினம் (08) இந்தியா நோக்கி புறப்படவுள்ள நிலையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் இலங்கைக்கான முதலாவது போட்டி இம்மாதம் 17 ஆம் திகதியே இடம்பெறவுள்ளது.
 
தற்போது புதிய தேர்வுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அரவிந்த டி சில்வா, இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் கிரிக்கெட் தேர்வுக்குழுவின் அங்கத்தவராக இருந்த ஒருவர் என்பதோடு, 1996 இல் இலங்கை உலகக்கிண்ணத்தை வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சங்கக்கார தலைமையிலான 2011 உலகக் கிண்ணத்தின் போதான அணித் தெரிவில் அவருக்கும் பங்கு உண்டு.
 
இதேவேளை, கடந்த ஓகஸ்ட் மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இலங்கையின் நட்சத்திர வீரரான குமார் சங்கக்கார, 7 மாதங்கள் கழிந்த நிலையில் புதிய தேர்வுக்குழுவில் உள்ளடங்கியுள்ளமையானது கிரிக்கெட் ரசிகர்களிடையே பாரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் இங்கிலாந்தின் பிராந்திய அணியான 'சர்ரே' அணிக்காக விளையாடி வருகின்றார்.
 
தெரிவுக்குழுவில் இணைக்கப்பட்டுள்ள மற்றுமொரு வீரர் ரொமேஷ் களுவிதாரண, இவர் இலங்கையின் மற்றுமொரு சிறப்பான முன்னாள் விக்கெட் காப்பாளர் என்பதோடு அண்மையில் இலங்கை ஏ அணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையின் முதலாவது டெஸ்ட் போட்டியில் (1982) விளையாடிய லலித் களுபெரும, மொத்தமாக இரு டெஸ்ட் போட்டிகளிலும் 4 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய ஒருவர் என்பதோடு, தேர்வுக்குழுவின் மற்றுமொரு உறுப்பினரான ரஞ்சித் மதுரசிங்க, 1988 தொடக்கம் 1992 காலப்பகுதியில் 3 டெஸ்ட் மற்றும் 12 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடிய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add new comment

Or log in with...