உணவு நஞ்சானது: 51 பேர் வைத்தியசாலையில்

காத்தான்குடி பிரதேசத்திலுள்ள கடையொன்றில் சமைத்து விற்கப்பட்ட உணவு விஷமானதன் காரணமாக அங்கு உணவு உட்கொண்ட 20 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியாசாலையில் நேற்று (20) சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனர்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10647","attributes":{"alt":"","class":"media-image","height":"437","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒரு சிறுமி மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம். ஜாபிர் தெரிவித்தார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10648","attributes":{"alt":"","class":"media-image","height":"446","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள சாப்பாட்டுக் கடை ஒன்றில் உணவை உட்கொண்டோருக்கு திடீரென தலைசுற்று, வாந்திபேதி, மயக்கம் போன்ற அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்தே இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
நோயாளிகளில் சிலர் தீவிர சிகிச்சை, அதி தீவிர கண்காணிப்புப் பிரிவிலும், நோயாளர் விடுதிகளிலும் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிலர் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும், டாக்டர் எம்.எஸ்.எம். ஜாபிர் தெரிவித்தார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10649","attributes":{"alt":"","class":"media-image","height":"422","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
குறித்த சம்பவத்தில் ஆண்கள்,பெண்கள்,இளைஞர்கள்,யுவதிகள்,சிறுவர், சிறுமிகள் என பலரும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அத்தியட்சகர் தெரிவித்தார்.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"10650","attributes":{"alt":"","class":"media-image","height":"514","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
இவ்விடயம் தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
(காத்தான்குடி விஷேட நிருபர் - பளுல்லாஹ் பர்ஹான்)

Add new comment

Or log in with...