நெல் கொள்வனவுக்கென பொதுவான திட்டம் வகுக்கப்பட வேண்டும்

நெல் கொள்வனவு பாரிய வியாபாரமாகிவிட்டது என்கிறார் அநுரகுமார

நிர்ணய விலைக்கு நெல் கொள்வனவு செய்யப்படும் என அரசாங்கம் அறி வித்திருந்தாலும் நெல் கொள்வனவு பாரியதொரு வியாபாரமாகியிருப்பதாக ஜே.வி.பியின் தலைவரும், எதிர்க்கட்சி யின் பிரதம கொரடாவுமான அநுரகுமார திசாநாயக்க குற்றஞ்சாட்டினார்.

நெல் கொள்வனவு தொடர்பில் பொது வான திட்டமொன்றை வகுப்பதன் ஊடாகவே விவசாயிகளுக்குப் பாதிப்பு இன்றி நெல் கொள்வனவுப் பிரச்சினைக் குத் தீர்வொன்றைக் காணமுடியும் என்றும் அவர் கூறினார்.

தேயிலை, இறப்பர் மற்றும் நெல் உற் பத்திக்கான நிர்ணயவிலை வழங்குவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அநுரகு மார திசாநாயக்க மேற்கண்டவாறு கூறி னார். ஒவ்வொரு வருடமும் மார்ச், ஏப்ரல் மாதங்களிலும், செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களிலும் நெல் கொள் வனவு தொடர்பான பிரச்சினை ஏற்படு கிறது.

கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கம் இந்தக் காலப் பகுதிகளில் வெவ்வேறு பதில்களை வழங்கியிருந்தன. ஆசியாவிலேயே பெரிய நெல் களஞ்சிய மொன்று ஒயாமடுவவில் அமைப்பதாகக் கூறினார்கள் ஆனால் அப்படியெதுவும் அமைக்கப்படவில்லை.

பின்னர் குண்டு துளைக்காத பொலித்தீன் களஞ்சிய மொன்றை ரஷ்யாவிலிருந்து கொண்டு வருவதாகக் கூறினார்கள். இந்தக் களஞ்சியம் இரத்மலானை முகாமில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பரிசோதனையின் போது பாதிக்கப்படாத இந்த பொலித்தீன் களஞ்சியம் அம் பாறையில் எலிகளால் அரிக்கப்பட்டு விட்டதாகக் கூறினார்கள். தற்பொழுது ஆட்சிக்கு வந்திருக்கும் அரசாங்கம் நெல்லை களஞ்சியப்படுத்த மத்தள விமான நிலையத்தைப் பயன்படுத்துவ தாகக் கூறியது.

ஒவ்வொரு முறை யில் ஒவ்வொரு பதில்கள் வழங்கப்படு கின்றன. கடந்த 2013ஆம் ஆண்டு நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு 2991 மில்லி யன் ரூபா நஷ்டம் ஏற்பட்டது.

நெல் கொள்வனவுக்காக 6000 மில்லியன் ரூபா ஒதுக்கி அதில் சுமார் 3000 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நெல் கொள்வனவின் போது அரசாங்கம் தமக்கு நெருக்கமான ஒருசில வர்த்தகர்க ளுக்கு மாத்திரம் குறைந்த விலையில் நெல்லை வழங்குகின்றனர்.

இவ்வாறு நெல்லை வழங்கும்போது ஏற்படும் நஷ்டத்தையும் அரசாங்கமே ஏற்றுக் கொள்கி றது. நெல் கொள் வனவு என்பது பாரியதொரு வியாபார மாகியுள்ளது.

ஒவ்வொரு உற்பத்தியின்போதும் இறுதிப்பொருளுக்கான விலையை உற்பத்தியாளரே தீர்மானிக்கின்றார். ஆனால் நெல் விவசாயிகள் தமக்கான விலையைத் தீர்மானிக்க முடியாது. கொள்வனவு செய்பவர்களே தீர்மானிக் கின்றனர்.

இவற்றுக்கு நிரந்தர தீர்வுகாண்பதா யின் நெல் கொள்வனவு குறித்த பொது வான திட்டமொன்றை வகுப்பது அவசி யமானது என்றும் அவர் கூறினார்.

எம்.எஸ்.பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...