நிலைய பொறுப்பதிகாரிகள் 11 பேர் இடமாற்றம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 11 பேர் இடமாற்றப்பட்டுள்ளனர்.
 
குறித்த பகுதியில் தேவைப்படும் சேவையினை கருத்திற்கொண்டு பொலிஸ் மாஅதிபர் என். கே. இளங்ககோனினால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
 
அதன் படி, சம்மாந்துறை (மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுக்கு), ஆனமடுவ (சம்மாந்துறைக்கு), இலுப்புக்கடவை (களுத்தறை பொலிஸ் கல்லூரிக்கு), கொட்டாஞ்சேனை (இலுப்புக்கடவைக்கு), பொத்துவில் (மட்டக்களப்புக்கு), குட்டிகலை (பொத்துவிலுக்கு) அங்கும்புற (வாகறைக்கு), வாகறை (அங்கும்புறைக்கு) பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் இடமாற்றப்பட்டுள்ளனர். 
 
மேலும், மீகஹதென்ன பொறுப்பதிகாரி, கொழும்பு நகர போக்குவரத்து பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதோடு, மீகஹதென்ன நிலையத்திற்கு கண்டி பிரிவு பிரதான பொலிஸ் பரிசோதகர் டி.சி. கொடகே நியமிக்கப்பட்டுள்ளார்.
 
குட்டிகலை நிலையத்திற்கு ஜாஎல பொலிஸ் பரிசோதகர் டப்ளியூ.ட்ப்ளியூ.சீ.பீ. விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
 

Add new comment

Or log in with...