8ஆவது பாராளுமன்றின் சபாநாயகர் கரு ஜயசூரிய

8ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கருஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
 
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கரு ஜயசூரிய முன்மொழியப்பட்டார். அதனை அடுத்து கடந்த பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஐ.ம.சு.முவின் பாராளுமன்ற உறுப்பினர் நிமால் சிறிபால டி சில்வாவினால் வழி மொழியப்பட்டதை அடுத்து சபாநாயகராக ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.
 
ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இவர். நடந்து முடிந்த தேர்தலில் ஐ.தே.க.வின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
 
74 வயதான சபாநாயகர் கரு ஜயசூரிய, 1940 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி பிறந்தார். கொழும்பு ஆனந்தா கல்லூரியில் தனது ஆரம்ப கல்வியை கற்றார்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு அரசியலுக்குள் நுழைந்த இவர், ஐ.தே.கவின் பிரதித் தலைவராக கடமையாற்றியவர் என்பதோடு, அக்கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவராவார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியல் பல்வேறு அமைச்சுப் பதவிகளில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

Or log in with...