பதில் முதலமைச்சரின் கீழ் வடமாகாண சபை

 

றிஸ்வான் சேகு முகைதீன்

வடமாகாண சபையின் பதில் முதலமைச்சராக வடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வடமாகாண  அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் முன்னிலையில் இவர் நேற்று (17) மாலை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வெளிநாடு சென்றுள்ளமையினால் வடமாகாண சபையின் பதில் முதலமைச்சராகவும், வடமாகாண நிதி மற்றும் திட்ட மிடல், சட்டம் ஒழுங்கு மற்றும் மின்சார பதில் அமைச்சராக தம்பிராஜா குருகுலராசா நியமனம் பெற்றுள்ளார்.

வட மகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் அமைச்சுப் பதவிகள் வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராஜா குருகுலராசா மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, காணி மற்றும் வீதி அபிவிருத்தி,  வீடு மற்றும் நிர்மாணம், நீர்வள, கூட்டுறவு அபிவிருத்தி, சமூகசேவைகள் மற்றும் புனர்வாழ்வு, மகளீர் விவகாரம், கைத்தொழில் மற்றும் வர்த்தக மேம்பாடு, சுற்றுலா, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு வழங்கல் மற்றும் விநியோக பதில் அமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன் சத்தியப்பிர மாணம் செய்து கொண்டுள்ளனர்.

(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)

 


Add new comment

Or log in with...