பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீரவும் அல்ல திலங்க சுமதிபாலவும் அல்ல

- தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக, மஹிந்த அமரவீர அல்லது திலங்க சுமதிபாலவை ஏற்றுக்கொள்வதை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இது தொடர்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு முடியும் வரை குறித்த உத்தரவு அமுலில் இருக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மஹிந்த அமரவீர விசாரணைகளை மேற்கொண்டிருந்தார்.

அதற்கு பதிலளித்தள்ள தேர்தல்கள் ஆணைக்குழு இத்தீர்மானத்தை மஹிந்த அமரவீரவுக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.

மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்பி.பி.சி. குலரத்னவின் கையொப்பத்துடன் குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்சியின் தீர்மானத்திற்கு புறம்பாக தற்போது அரசாங்கத்தில் விவசாய அமைச்சராக பதவி வகிப்பதன் காரணமாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து மஹிந்த அமரவீரவை நீக்கி, திலங்க சுமதிபாலவை நியமிக்க அக்கூட்டமைபபு அண்மையில் தீர்மானித்திருந்தது.

குறித்த நியமனம் சட்டவிரோதமானது எனத் தெரிவித்து மஹிந்த அமரவீர நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...