வெளிநாட்டு பால் மா விலைகளை ரூ. 80 முதல் 200 வரை குறைக்க தீர்மானம்

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய,

  • 1 கிலோ கிராம் பால் மா பொதி விலையை ரூ. 200 இனாலும்
  • 400 கிராம் பால் மா பொதி விலையை ரூ. 80 இனாலும்

குறைக்க திட்டமிட்டுள்ளதாக அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் வாரமளவில் குறித்த விலை குறைப்பை அமுல்படுத்த எதிர்ப்பார்ப்பதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

டொலரின் விலை குறைவடைந்துள்ளமை மற்றும் உலக சந்தையில் பால் மா விலை குறைவடைந்துள்ளமையை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...