பெற்றோல் பெற்றுத் தருவதாக மோசடி; பொலிஸ் உத்தியோகத்தர் கைது

பெற்றோல் பெற்றுத் தருவதாக பணத்தை பெற்று மோசடி மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நாளை (17) வியாழக்கிழமை  வரை விளக்கமறியலில் வைக்குமாறு , பருத்தித்துறை நீதவான்  நீதிமன்ற  நீதிபதி பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டார்.

பலாலி பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் எரிபொருள் பெற்றுத்தருவதாக கூறி ரூ. 5 இலட்சம் பணம் பெற்றுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் எரிபொருள் நிரப்பி கொடுக்காததால் பணத்தை வழங்கியவர் பணத்தை மீளக்கேட்டும் பணம் வழங்காத காரணத்தால் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு காங்கேசந்துறை விசேட குற்றப்பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இன்று புதன்கிழமை (16) மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டு  பருத்தித்துறை  நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதே அவருக்கு நாளை வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

(நாகர்கோவில் விஷேட  நிருபர்)


Add new comment

Or log in with...