விமானப்படையின் 6ஆவது வான் வழி விதைக்குண்டு வீச்சு செயல்திட்டம்

விமானப்படையின் 6ஆவது வான் வழி விதைக்குண்டு வீச்சு செயல்திட்டம்-Air-Force-Seed-Bombing-Project

காடுகளை மீளுருவாக்கும் பாரிய செயல் திட்டம்

இலங்கையில் வன அடர்த்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன தலைமையின் கீழ் இலங்கை விமானப் படையினர் இலங்கை வன பாதுகப்பு திணைக்களம், பேராதனை பல்கலைக்கழக விவசாயபீடம், மத்திய சுற்றுச்சூழல் ஆணையகம் மற்றும் மாஸ் கெபிடல் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுடன் இணைந்து ஆரம்பித்துள்ளனர். கடந்த 23 ஆம் திகதி வத்தேகம கெபிளித்த வனப்பகுதியில் 06வது முறையாக வான் வழிமூலம் விதைகுண்டு வீச்சு செயற்திட்டம் இடம்பெற்றது.

விமானப்படையின் 6ஆவது வான் வழி விதைக்குண்டு வீச்சு செயல்திட்டம்-Air-Force-Seed-Bombing-Project

விமானப்படை கட்டளை வேளாண்மை பிரிவின் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் ரஜீவ் கொடிப்பிலி மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமையில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைத்துள்ள வேளாண்மை பிரிவினால் இந்த விதைக்குண்டுகள் தயாரிக்கப்பட்டன.

விமானப்படையின் 6ஆவது வான் வழி விதைக்குண்டு வீச்சு செயல்திட்டம்-Air-Force-Seed-Bombing-Project

2030 ஆம் ஆண்டில் பசுமை விரிவாக்கத்தை 27% முதல் 32% ஆக உயர்த்துவதன் மூலம் நாட்டின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக இலங்கையின் வன அடர்த்தியை மேம்படுத்தும் நோக்கத்தை அடைவதே இத்திட்டத்தின் இலக்காகும்.

இதன் முதலாவது செயற்திட்டமாக ரணுறவ தேசிய வனப்பகுதியின் 5 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 5,000 விதைக்குண்டுகள் வீசப்பட்டன.

விமானப்படையின் 6ஆவது வான் வழி விதைக்குண்டு வீச்சு செயல்திட்டம்-Air-Force-Seed-Bombing-Project

2 வது கட்டமாக அம்பாறை லகுன வனப்பகுதியின் 60 வனப்பகுதியில் 67,000 விதைக்குண்டுகளும் 3வது கட்டமாக லகுன தேசிய பூங்காவில் 2020 டிசம்பர் காலப் பகுதியில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் 30,000 விதைக்குண்டுகளும் வீசப்பட்டன.

விமானப்படையின் 6ஆவது வான் வழி விதைக்குண்டு வீச்சு செயல்திட்டம்-Air-Force-Seed-Bombing-Project

நான்காவது முறையாக மீண்டும் லகுன தேசிய பூங்காவில் 60 ஏக்கர் நிலப்பரப்பில் 67,000 விதைக்குண்டுகளும் 5 வது முறையாக கெபிளித்த தேசிய வனப்பகுதியில் 75 ஏக்கர் நிலப்பரப்பில் 80,000 விதைக்குண்டுகளும் இதுவரை விமானப்படையினால் வான் வழிமூலம் வீசப்பட்டுள்ளன.

விமானப்படையின் 6ஆவது வான் வழி விதைக்குண்டு வீச்சு செயல்திட்டம்-Air-Force-Seed-Bombing-Project

வீரவெல இலங்கை விமானப்படை தளத்தை மையமாக கொண்டு எம்ஐ -17 ஹெலிகொப்டர் உதவியுடன் சுமார் 65,000 விதைக்குண்டுகள் சுமார்70 ஏக்கர் நிலப்பரப்பில் வான் வழிமூலம் வீசப்பட்டன.

விமானப்படையின் 6ஆவது வான் வழி விதைக்குண்டு வீச்சு செயல்திட்டம்-Air-Force-Seed-Bombing-Project

இவற்றுள், கூலன், வேம்பு, ஆத்தி, நாகை, புளி, பருத்தி, பாலை, வீரை, மருது, கித்துள் போன்றவை உள்ளடங்குகின்றன. இந்த திட்டத்திற்கு விமானிகளாக விங் கமாண்டர் சேனக கூரகமுவ மற்றும் துணை விமானியாக பிளைட் லேப்ட்டினால் சுதார அமரதேவ ஆகியோர் செயற்பட்டனர்.