செப்டெம்பர் 09, 10: பொருளாதார மத்திய நிலையங்கள், மெனிங் சந்தை திறக்கப்படும்

செப்டெம்பர் 09, 10: பொருளாதார மத்திய நிலையங்கள், மெனிங் சந்தை திறக்கப்படும்-Island Wide Economic Centres Open on Sep 09-10-Shashindra Rajapaksa

நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் பேலியகொடை மெனிங் சந்தை ஆகியன செப்டெம்பர் 09, 10 ஆகிய தினங்களில் திறக்கப்படுமென விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மொத்த விற்பனைக்காக மாத்திரம் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் ஓகஸ்ட் 24, 25, 28, 29, செப்டெம்பர் 01, 02, மற்றும் நேற்று (05) இன்று (06) ஆகிய தினங்களில் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓகஸ்ட் 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட கொவிட்-19 தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் செப்டெம்பர் 13ஆம் திகதி திங்கட்கிழமை வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையை கருத்திற்கொண்டு, விவசாயிகள் தங்களது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கும், மொத்த விற்பனைக்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...