நிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்

தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த புகையிரத சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க புகையிரத திணைக்களம் தீர்மானம் எடுத்துள்ளது.

இதற்கமைய நாளை மறுதினம் (28) முதல் இல. 4021 மற்றும் இல. 4022 புகையிரதங்கள் சனி, ஞாயிறு தினங்களிலும், இல. 1001 புகையிரதம் வெள்ளி, சனி தினங்களிலும், இல. 1002 புகையிரதம் சனி, ஞாயிறு தினங்களிலும் சேவையில் ஈடுபடுத்த புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, கல்கிஸ்ஸை/ கொழும்பு, கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை தினமும் மு.ப. 5.10 மணிக்கு புறப்படும் இல. 4021 புகையிரதம், காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு, கோட்டை மற்றும் கல்கிஸ்ஸை வரை தினமும் பி.ப. 11.15 மணிக்கு புறப்படும் இல. 4022 புகையிரதம் ஓகஸ்ட் 29, 30, 31, செப்டெம்பர் 01ஆம் திகதிகளில் அதே நேரத்திற்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கோட்டையிலிருந்து பதுளை வரை தினமும் மு.ப. 6.45 மணிக்கு சேவையில் ஈடுபடும் இல. 1001 புகையிரதம் இம்மாதம் 28ஆம், 30ஆம், 31ஆம் திகதிகளில் சேவையில் ஈடுபடவுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு, கோட்டை வரை தினமும் மு.ப. 8.00 மணிக்கு சேவையில் ஈடுபடும் இல. 1002 புகையிரதம் இம்மாதம் 31ஆம் திகதியும் செப்டெம்பர் 01ஆம் திகதி அதே நேரத்திற்கு சேவையில் ஈடுபடவுள்ளது.(சு)  


Add new comment

Or log in with...