OPPO: கம்பியுடனான, கம்பியற்ற புதிய உயர் சக்தி ஃபிளாஷ் சார்ஜ் வரிசை அறிமுகம்

OPPO: கம்பியுடனான, கம்பியற்ற புதிய உயர் சக்தி ஃபிளாஷ் சார்ஜ் வரிசை அறிமுகம்-OPPO New Flash Charger Launch

- சட்டைப் பை அளவிலான அதி சக்தி வாய்ந்த மினி சார்ஜரும் அறிமுகம்

15 ஜூலை, 2020, கொழும்பு, இலங்கை: 125W ஃபிளாஷ் சார்ஜ், 65W AirVOOC வயர்லெஸ் பிளாஷ் சார்ஜ், மிகச் சிறிய கைக்கடக்கமான 50W மினி சூப்பர் வூக் சார்ஜர் (mini SuperVOOC) மற்றும் 110W மினி ஃபிளாஷ் சார்ஜர் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ வெளியீட்டை OPPO இன்று அறிவித்துள்ளது.

125W ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் மொபைல் போன் துறையில் சமீபத்திய ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்ப முன்னேற்றத்தை காட்டுகிறது. மேம்பட்ட குறியாக்க வழிமுறை (encryption algorithm) மற்றும் கடுமையான வெப்பநிலை கட்டுப்பாட்டு ஒழுங்குபடுத்தல்களுடன், இது ஃபிளாஷ் சார்ஜிங் சாதனத்தின் பாதுகாப்பான மற்றும் திறனான பயன்பாட்டை செயல்படுத்துகிறது. 65W AirVOOC வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜ் ஆனது, பயனர்கள் கம்பியுடனான அல்லது வயருடனான சார்ஜிங்குடன் ஒப்பிடும்போது மிக வேகமாக சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட 50W மினி சூப்பர்வூக் சார்ஜர் மற்றும் 110W ஃபிளாஷ் சார்ஜர் ஆகியன, OPPO இன் VOOC ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தின் தனித்துவமான கண்டுபிடிப்புகளாகும். மதிப்பிட முடியாத மிக பாரமற்ற, மெல்லிய மற்றும் கையடக்க அம்சங்களின் விளைவாக உயர் சக்தி கொண்ட சார்ஜர்களின் சிறிய வடிவங்களின் தலைவன் என்று கூறலாம்.

OPPO: கம்பியுடனான, கம்பியற்ற புதிய உயர் சக்தி ஃபிளாஷ் சார்ஜ் வரிசை அறிமுகம்-OPPO New Flash Charger Launch

OPPO இன் பிரதான சார்ஜிங் தொழில்நுட்ப விஞ்ஞானி ஜெஃப் ஷாங் (Jeff Zhang) கருத்துத் தெரிவிக்கையில்: “உலகளவில் 5G மாற்றத்தை விரைவுபடுத்தியதுடன், கேமிங் மற்றும் வீடியோ பார்வையிடல் உள்ளிட்ட உயர்-சக்தி-நுகர்வு அப்ளிகேஷன்களின் அதிகரித்துவரும் பல்வகைப்படுத்தல் ஆனது, மொபைல் போன்களின் மின்கலங்களின் ஆயுள் மற்றும் பயனரின் சார்ஜிங் அனுபவம் தொடர்பில் புதிய சவால்களாக காணப்படுகிறது. VOOC ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் 2014 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே, OPPO வேகமாக சார்ஜ் செய்வதில் முன்னணியில் திகழ்கிறது. தற்போது, ​​பயனர்களுக்கு பாதுகாப்பான, திறனான மற்றும் வசதியான அதிவேக சார்ஜிங் அனுபவத்தை வழங்கும் பொருட்டு, உயர் சக்தி, வயர்லெஸ் மற்றும் அதி-சிறிய சார்ஜிங் தொழில்நுட்பத் துறையில் எங்கள் நிபுணத்துவம் மற்றும் நன்மைகளைத் தொடர்ந்து வழங்குவதற்காக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்றார்.

125W ஃபிளாஷ் சார்ஜ்: 5G சகாப்தத்தின் மிக வேகமான சார்ஜிங்
OPPO இன் 125W ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம் நேரடி சார்ஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் 4000mAh மின்கலத்தை 5 நிமிடங்களில் 41% வரை சார்ஜ் செய்ய முடியும். அத்துடன் 20 நிமிடங்களில், வேகமான விகிதத்தில் அதனை முற்றாக சார்ஜ் செய்ய முடிகிறது. ​​இது தற்போதுள்ள தொழில்துறையில் மிகவும் மேம்பட்ட ஃபிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பமாகும்.

SuperVOOC இன் தொழில்நுட்ப வடிவமைப்பிலிருந்து உருவான 125W ஃபிளாஷ் சார்ஜ் ஆனது, ஒரு விரிவான வன்பொருள் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அது தவிர, 125W ஃபிளாஷ் சார்ஜிங் அமைப்னின் பின்புலத்தில் உள்ள தொழில்நுட்பம் யாதெனில், மேலதிகமாக 10 வெப்பநிலை சென்சர்களைச் சேர்த்துள்ளதன் மூலம், தொகுதியில் பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்தியுள்ளதுடன், சார்ஜிங் நிலையை கண்காணித்தல் மற்றும் சார்ஜ் செய்யும் போது அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்கிறது.

65W AirVOOC வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜ்: வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது
சார்ஜிங் கேபிள்களில் காணப்படும் தொந்தரவு மற்றும் சிரமத்திற்கு பதிலளிக்கும் வகையில், சந்தையில் முன்னணி வகிக்கும் வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பம், 65WAirVOOC வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜ் ஆகும். இது வயர்லெஸ் சார்ஜிங் செயல்திறனை மேலும் அதிகரிக்க, சுய-மேம்படுத்தலுடனான தனிமைப்படுத்தப்பட்ட சார்ஜ் பம்பும் தொழில்நுட்பத்தையும் சமாந்தரமான இரட்டை சுருள் வடிவமைப்பையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

65W AirVOOC வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜ் மூலம், 4000mAh மின்கலத்தை 30 நிமிடங்களில் அதிவேக விகிதத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். இத்தொழில்நுட்பமானது வெளியிலிருந்து நுழையும் பொருளைக் கண்டறிதல் செயல்பாட்டிற்கு மேலதிகமாக, ஐந்து மடங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது.

சார்ஜரின் அடிப்பகுதியில் ஒரு குறைகடத்தி குளிரூட்டி பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வெப்ப நுழைவு மற்றும் வெளியேறும் தன்மையை கட்டுப்படுத்தப்படுவதோடு,. இதன் மூலம் மொபைல் போன் சார்ஜ் செய்யப்பட்ட பின்னர் சூடாகாமல் இருப்பதை உறுதி செய்கிறது. தொலைபேசியின் பின்புறத்தின் வெப்பநிலை 2 மடங்கு குறைவாக வைக்கப்பட்டு, அமைக்கப்பட்ட தனித்துவமான வடிவமைப்பு காரணமாக, மொபைல் போன் சார்ஜ் ஆவதை மிகவும் வசதியாக்குவதுடன் அதிக சக்தியுடன் சார்ஜ் செய்யும் திறனையும் கொண்டுள்ளது. 65W AirVOOC வயர்லெஸ் ஃபிளாஷ் சார்ஜ் ஆனது, ஒரு தனித்துவமான மற்றும் மட்டிட முடியாத சார்ஜிங் அனுபவத்தை வழங்குகிறது. அத்துடன் இது 5G சகாப்தத்தில் பயனர்களின் முதன்மையான சார்ஜர் தெரிவாக மாறக்கூடும்.

உயர் சக்தி கொண்ட மிகச் சிறிய சார்ஜர் தொடர்: சிறிய அளவு மற்றும் எடுத்துச் செல்ல எளிதானது
OPPO உலகின் மிகச்சிறிய மற்றும் மெல்லிய 50W மினி சூப்பர்வூக் (mini SuperVOOC) சார்ஜர் மற்றும் ஒரு தனித்துவமான இரட்டை-நிலை கட்டமைப்பைக் கொண்ட 110W மினி ஃபிளாஷ் சார்ஜர் ஆகியவற்றை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

OPPO இன் 50W mini SuperVOOC சார்ஜர் ஆனது, பல்கோண வளைவு (multi-radian curve) செயலாக்கத்தின் மூலம், வணிக அட்டை இடும் அமைப்பை (card holder) ஒத்த அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் சுவரின் தடிப்பு 1.05cm ஆகும். OPPO இன் பொறியாளர்கள் 50W மினி SuperVOOC சார்ஜருக்கு ஒரு புரட்சிகர கட்டமைப்பை வடிவமைத்து, புதிய இடவியல் வடிவமைப்பைப் பயன்படுத்தி அதன் மூலம் அதிக இடத்தைப் பிடிக்கும் கூறுகளின் அளவைக் குறைத்துள்ளனர். அதன் வடிவமைப்பின் விளைவாக, பயனர்கள் அதை எளிதாக தங்கள் சட்டைப் பைகளில் மற்றும் கோட் பைகளில் எடுத்துச் செல்ல முடிகின்றது. இது பயணத்திற்கும், வெளியில் அடிக்கடி செல்லும்போதும் மிகவும் வசதியாக அமைகின்றது. 50W மினி சூப்பர்வூக் சார்ஜர் மூலம், மொபைல் போன்கள் மற்றும் மடிகணனிகள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும்.

50W மினி சூப்பர்வூக் சார்ஜரை உருவாக்கியதன் மூலம், OPPO இன் 110W மினி ஃபிளாஷ் சார்ஜர் உயர் சக்தி அடப்டர்களுக்கான இடம் மற்றும் செயல்திறனின் வரம்புகள் வரையறுக்கப்பட்டுள்ளது. 110W மினி ஃபிளாஷ் சார்ஜர் தவிர, லெமினேட் மற்றும் சுருக்கப்பட்ட  கட்டமைப்புகள் ஆகிய அமைப்புகளினால் அமைக்கப்பட்டுள்ளது. இது அறிவார்ந்த இணைப்பின் சகாப்தத்தில், சாதாரண 18W சார்ஜரின் அளவைப் போன்று, அதன் அளவை வெறும் 35.76cm³ ஆகக் குறைக்கிறது.

OPPO இன் அதி-சிறிய சார்ஜர் தொடர் ஆனது, எங்கும் எந்த நேரத்திலும் ஃபிளாஷ் சார்ஜிங்கை வழங்குவதோடு, சார்ஜிங் உடன் பயணிப்பதை இப்போது உண்மையாக்கியுள்ளதுடன் பல சாதனங்களை இயக்கும் ஒற்றை சார்ஜராகவும் திகழ்கிறது.

2020 ஜூன் நிலவரப்படி, ஃபிளாஷ் சார்ஜிங்கிற்காக OPPO 2,800 க்கும் மேற்பட்ட உலகளாவிய காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்துள்ளது. VOOC ஃபிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தைக் கொண்ட, நிறுவனத்தின் 30இற்கும் மேற்பட்ட ஸ்மார்ட்போன் மாதிரிகள் உலகளவில் 157 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு அதிவேக சார்ஜிங் அனுபவத்தை வழங்கியுள்ளன. அறிவார்ந்த இணைப்பின் சகாப்தத்தில் மொபைல் ஃபிளாஷ் சார்ஜிங்கிற்கான தேவை அதிகரித்து வருவதால், OPPO தொடர்ந்து VOOC ஃபிளாஷ் சார்ஜ் தளங்களை மேம்படுத்தவும், உலகெங்கிலும் உள்ள அதன் பயனர்களுக்கு அனைத்து பயன்பாட்டு விதங்களுக்கும் பொருத்தமான ஃபிளாஷ் சார்ஜிங் அனுபவங்களை வழங்குவதற்கா, தொழில்துறை முன்னணி தொழில்நுட்பங்களை உருவாக்கும்.


Add new comment

Or log in with...