285
தேசிய முற்போக்கு திராவிட கட்சிய தலைமையகத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் நேற்று (02) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன், சாலி கிராமத்திலுள்ள அவரது வீட்டுக்கு சென்று, விஜயகாந்தின் மனைவியும் தே.மு.தி.க. கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.