194
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.
நெப்பியரில் நேற்று (27) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்றது. இந்நிலையில் பதிலெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது. ஆரம்ப வீரர் லிட்டோன் தாஸ் ஆட்டமிழக்காது 42 ஓட்டங்களை பெற்றார். இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் பங்களாதேஷ் 1–0 என முன்னிலை பெற்றது.