– இந்திய கடலோர காவல் படை நடவடிக்கை
இராமநாதபுர மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் இருந்து நாட்டுப்படகில் இலங்கைக்கு நேற்று (12) கடத்த முயன்றசுமார் 1 இலட்சம் வலி நிவாரணி மாத்திரைகள் இந்திய கடலோர காவல் படையினரால் நடுக்கடலில் சுற்றிவளைக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
இந்திய கடலோர காவல் படை வீரர்களை கண்டதும் படகில் இருந்தவர்கள் கடலில் குதித்து தப்பித்ததால் படகுடன் வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்து இந்திய காவல் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகள் போதை மாத்திரைகளாக இலங்கையில் பயன்படுத்தப்படுவதற்காக கொண்டு செல்லப்பட்டதாகவும் இதன் மொத்த இந்திய மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மன்னார் குறூப் நிருபர் – எஸ்.றொசேரியன் லெம்பேட்