Sunday, November 24, 2024
Home » கொட்டகலை நகரில் திடீர் சுற்றிவளைப்பு சோதனை

கொட்டகலை நகரில் திடீர் சுற்றிவளைப்பு சோதனை

- 18 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

by Prashahini
November 24, 2024 4:34 pm 0 comment

கொட்டகலை நகரில் சுகாதார நடைமுறைகளை மீறும் வகையிலான வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட உணவகம், சில்லறைக் கடைகள் மற்றும் மொத்த வியாபாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

18 கடை உரிமையாளர்களுக்கு எதிராகவே சட்ட நடவடிக்கை எடுப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பரிசோதர்களாலேயே இதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொட்டகலை நகருக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சுகாதார பாதுகாப்புடனான உணவுகள் மற்றும் பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்தால் திடீர் சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கொட்டகலை பிரதேச சபையிடம் வர்த்தக அனுமதி பத்திரம் பெறாமல், சுகாதாரம் அற்ற முறையில் உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை நடத்திவந்த 18 உரிமையாளர்கள் கண்டறியப்பட்டனர்.

அத்துடன், சுகாதார பாதுகாப்பற்ற பல உணவுப் பொருட்களும் இதன்போது அழிக்கப்பட்டன.

ஹட்டன் சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT