Sunday, November 24, 2024
Home » இந்தியா, மாலைதீவு இருதரப்பு உறவும் முன்னேற்றமும்!

இந்தியா, மாலைதீவு இருதரப்பு உறவும் முன்னேற்றமும்!

by Rizwan Segu Mohideen
November 24, 2024 11:10 am 0 comment

இந்தியப் பெருங்கடலின் முத்துக்கள் என அழைக்கப்படும்மாலைதீவுடன் இந்தியாவின் உறவானது பல நூற்றாண்டுகள்பழமை வாய்ந்தது. கலாச்சார, வர்த்தக மற்றும் பாதுகாப்புரீதியான பல்வேறு அம்சங்களில் இரு நாடுகளும்நெருக்கமான உறவைக் கொண்டுள்ளன.

மாலைதீவின் புவியியல் அமைவிடம் இந்தியப்பெருங்கடலில் மிகவும் முக்கியமான இடத்தைப்பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து 700 கிலோமீட்டர்தொலைவில் அமைந்துள்ள இத்தீவுக் கூட்டம், கடல்வழிவர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பண்டைய காலம்முதலே இந்திய வணிகர்கள் மாலைதீவுடன் வர்த்தகஉறவுகளைப் பேணி வந்துள்ளனர்

இந்தியாமாலைதீவு இடையிலான வர்த்தக உறவுகள்அண்மைக் காலமாக  வளர்ச்சி கண்டு வருகின்றன. சுற்றுலா, மீன்பிடி, கட்டுமானம் போன்ற துறைகளில் இரு நாடுகளும்கூட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா, மாலைதீவுக்கு முக்கிய வர்த்தகப் பங்காளியாகவிளங்குகிறது. அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள், கட்டுமானப் பொருட்கள் ஆகியவற்றை இந்தியா வழங்கிவருகிறது.

கல்வி மற்றும் சுகாதார ஒத்துழைப்பு மாலைதீவு மாணவர்கள்பலர் இந்தியாவில் உயர்கல்வி பயில்கின்றனர். மருத்துவக்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வியில் இந்தியா முக்கியபங்களிப்பை வழங்குகிறது. கோவிட்-19 தொற்றுநோய்காலத்தில் இந்தியா வழங்கிய உதவிகள் இரு நாடுகளுக்கும்இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியது.

கடல்சார் பாதுகாப்பு விவகாரங்களில் இரு நாடுகளும்நெருக்கமான ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளன. கடற்கொள்ளை, சட்டவிரோத மீன்பிடி, கடல்சார்சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் கூட்டுநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியக்கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை மாலைதீவுடன்தொடர்ந்து ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன.

மாலைதீவில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கும்தீவிரவாத அச்சுறுத்தல்களும், காலநிலை மாற்றத்தால்ஏற்படும் அச்சுறுத்தல்களும் இரு நாடுகளும் எதிர்கொள்ளும்முக்கிய சவால்களாகும். எனினும், இவற்றைசமாளிப்பதற்கான கூட்டு முயற்சிகள் தொடர்ந்துமேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுப்பிக்கத்தக்கஎரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம்போன்ற துறைகளில்புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

இந்தியாவின்அயல்நாட்டுக்கு முன்னுரிமைஎன்றகொள்கையில் மாலைதீவுக்கு  முக்கிய இடம்வழங்கப்பட்டுள்ளது

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யமீனின்ஆட்சிக் காலத்தில், நாட்டின் வெளியுறவுக் கொள்கையில்குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டன. சீனாவுடனானஉறவை வலுப்படுத்தும் நோக்கில், பல முக்கியஉள்கட்டமைப்புத் திட்டங்கள் சீன நிறுவனங்களுக்குவழங்கப்பட்டன. இதன் விளைவாக, மாலைதீவு பெரும்கடன் சுமைக்கு ஆளானதோடு, இந்தியாவுடனானபாரம்பரிய உறவுகளிலும் விரிசல்கள் ஏற்பட்டன.

மாலைதீவின் சீன சார்பு கொள்கையின் தாக்கங்கள்பல்வேறு தளங்களில் உணரப்பட்டன. அந்நாட்டில்பொருளாதார ரீதியாக, சீனாவுடனான வர்த்தகம்பெருமளவில் அதிகரித்தது. ஆனால் அதே நேரத்தில்இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் மறு ஆய்வுக்குஉட்படுத்தப்பட்டன. பாதுகாப்பு துறையில், இந்தியகடற்படையுடனான ஒத்துழைப்பு குறைக்கப்பட்டு, சீனகடற்படையின் வருகைகள் அதிகரிக்கப்பட்டன. இதுஇந்தியப் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பு சமநிலையைபாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியது.

மாலைதீவின் மீதான சீனாவின் பொருளாதார ஊடுருவல்முதலில் அதன் ஒரு பட்டி மற்றும் ஒரு பாதை  முன்முயற்சி(Belt and Road Initiative) திட்டத்தின் மூலம்தொடங்கியது. மாலைதீவில் பாலங்கள், விமானநிலையங்கள், துறைமுகங்கள் என பல பெரியஉள்கட்டமைப்புத் திட்டங்களை சீனா மேற்கொண்டது. இத்திட்டங்களுக்காக வழங்கப்பட்ட பெருமளவு கடன்கள், மாலைத்தீவை சீனாவை நோக்கி அதிகமாக சார்ந்திருக்கும்நிலைக்குத் தள்ளியுள்ளது. இந்த நிலை, பாரம்பரியமாகமாலைத்தீவின் முதன்மை பொருளாதாரப் பங்காளியாகஇருந்த இந்தியாவின் நிலையை வெகுவாக பாதித்தது.

புவிசார் அரசியல் ரீதியாகப் பார்க்கும்போது, சீனாவின்வருகை இந்தியப் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்புசமநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைஏற்படுத்தியுள்ளது. மாலைதீவின் முக்கிய தீவுகளில்சீனாவின் கட்டுப்பாடு அதிகரித்து வருவதும், இந்தியப்பெருங்கடலில் சீனக் கடற்படையின் நடமாட்டம்அதிகரித்து வருவதும் இந்தியாவின் பாதுகாப்புவட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மாலைதீவின் தற்போதைய ஜனாதிபதி முஹம்மதுமுயிஸ்ஸின் ஆட்சியின் ஆரம்பக் கட்டத்தின் போதும் கூட, சீன சார்பு நிலையே காணப்பட்டது. இந்தியாவோடு எதிரும்புதிருமான நிலையைக் கொண்டிருந்த அவர் சீன சார்புநிலையில் பிடிவாதமாக இருந்தார். என்ற போதிலும், அண்மைக் காலமாக  மாலைதீவின் வெளியுறவுக்கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதைஅவதானிக்கக் கூடியதாக இருக்கிறது

இந்த மாற்றத்திற்கு, புவிசார் அரசியல் காரணிகளும் முக்கியகாரணமாக உள்ளன. இந்தியாவின்அண்டை நாடுகளுக்குமுன்னுரிமைஎன்ற கொள்கையின் தாக்கமும், இந்தியப்பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் அதிகரித்தஈடுபாடும், மாலைதீவை தனது சீன சார்பு கொள்கையைமறுபரிசீலனை செய்ய வைத்துள்ளன. மேலும், உள்நாட்டில்எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும், பொதுமக்களின்அதிருப்தியும் அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைஏற்படுத்தியுள்ளன. மீள முடியாத கடன் பொறியில்சிக்கியுள்ள மாலைதீவின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைநோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், முயிஸ்ஸுவின் அரசாங்கம்இந்தியாவுடனான உறவுகளை மீண்டும் வலுப்படுத்தமுன்வந்தது. பாதுகாப்பு ஒத்துழைப்பு புதுப்பிக்கப்பட்டது, பொருளாதார உதவிகள் பெறப்பட்டன, மற்றும் கடல்சார்பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டது.

மாலைதீவின் சீன சார்பு நிலைப்பாட்டின் போது, இந்தியாவுடனான உறவுகளில் பல சிக்கல்கள்ஏற்பட்டபோதிலும், பொருளாதார மற்றும் புவிசார் அரசியல்காரணங்களால் தற்போதைய நிர்வாகம் இந்தியாவுடன்மீண்டும் நெருங்கிய உறவை ஏற்படுத்த முன்வந்திருப்பதுஇரு நாடுகளின் நலன்களுக்கும், பிராந்திய அரசியலுக்கும்  பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதவன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT