Sunday, November 24, 2024
Home » இலங்கையின் நிர்மாணத் துறை மாற்றத்தை தூண்டும் INSEE கைத்தொழில் மாநாடு 2024

இலங்கையின் நிர்மாணத் துறை மாற்றத்தை தூண்டும் INSEE கைத்தொழில் மாநாடு 2024

by sachintha
November 23, 2024 7:45 am 0 comment

இலங்கையின் நிர்மாணத் தொழில்துறையில் முக்கியமானதொரு நிகழ்வாக அமையும் வகையில், INSEE Cement சீமெந்து நிறுவனம் தனது அங்குரார்ப்பண INSEE கைத்தொழில் மாநாடு 2024 (Industry Conference) நிகழ்வை நவம்பர் 07 ஆம் திகதியன்று மரியட் கொழும்பு Courtyard by Marriott ஹோட்டலில் வெற்றிகரமாக நடாத்தியுள்ளது.

“புரட்சிகரமான புத்தாக்கத்தினூடாக மகத்துவத்தை முன்னெடுத்தல்” (Driving Excellence through Disruptive Innovation) என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த ஆண்டு நிகழ்வானது, மாற்றத்திற்கு வித்திடும் வல்லமை படைத்த தொழில்நுட்பங்களை உள்வாங்கி, நீண்டகால மற்றும் தலைதூக்கும் சவால்களுக்கு தீர்வாக அமைகின்ற முன்னோக்கு சிந்தனை கொண்ட நடைமுறைகளுடன் நிர்மாணத் துறையின் மாற்றத்திற்கு வழிகாட்டுவதை நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டது.

பாரிய கைத்தொழில் வாடிக்கையாளர்கள், தொடர்புபட்ட அரச தரப்பினர், ஒப்பந்ததாரர்கள், கொள்கை வகுப்பாளர்கள், பொறியியலாளர்கள், மற்றும் கல்விமான்கள் அடங்கலாக, இலங்கையின் நிர்மாண மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளிலிருந்து தொடர்புபட்ட முக்கிய தரப்பினரை இம்மாநாடு ஈர்த்துள்ளது. பலதரப்பினரும் கலந்து கொண்ட இந்நிகழ்வானது அறிவுப் பகிர்வு மற்றும் ஒத்துழைப்பிற்கான வலுவான மேடையாக மாறியதுடன், நிலைபேணத்தக்க வளர்ச்சியை நோக்கிய தேசத்தின் நிர்மாணத் துறையை முன்னெடுத்துச் செல்லும் ஆற்றல் படைத்த மேம்பாடுகளுக்கும் களம் அமைத்துள்ளது. முக்கியமான தலைப்புக்களில் ஆழமான அறிவைப் பகிரும் வகையில் பல முன்னணி பிரபலங்கள் இந்த மாநாட்டில் இடம்பெற்ற அமர்வுகளில் பங்குபற்றியுள்ளனர். Access Engineering PLC நிறுவனத்தின் நிறைவேற்று பிரதித் தலைவர் கிறிஸ்தோபர் ஜொசுவா அவர்கள், “சாம்பலில் இருந்து எழும் பறவை போல் நிர்மாணத்தில் மகத்துவத்தை முன்னெடுத்தல்” (Driving Excellence from Ashes in Construction) குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், நிலைபேணத்தக்க வளர்ச்சிக்கான முக்கிய உந்துசக்திகளாக ஒழுக்கம், புத்தாக்கம் மற்றும் நெகிழ்திறன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT