Hayleys PLC இன் துணை நிறுவனமும், உலகளாவிய கூட்டாண்மைகள் மூலம் முதன்மையான மற்றும் விரிவான தொழில்துறை தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமுமான ஹேலீஸ் எவன்சுரா (Hayleys Aventura), கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எளிதான கட்டணத் திட்டங்களை வழங்குவதற்காக அவ்வங்கியுடன் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த எளிதான கட்டணத் திட்டமானது, வாடிக்கையாளர்களுக்கு Hayleys Aventura தயாரிப்புகள் மற்றும் சேவை வழங்கல்களில் 60 மாதங்கள் வரையான நீடிக்கப்பட்ட மீள் செலுத்தும் காலத்தை வழங்குகிறது. கிரண்ட்போஸ் (Grundfos) நீர்ப் பம்பிகள், மின்பிறப்பாக்கிகள், மின்பிறப்பாக்கி உதிரிப் பாகங்கள், ஏவரி வே-ட்ரோனிக்ஸ் (Avery Weight-Tronix) நிறை அளவீட்டுக் கருவிகள், ABB மோட்டார்கள் மற்றும் கட்டுப்படுத்திகள், இனவர்டேக் டிரைவ் (Invertek Drive) மின்சக்தி சேமிப்பு முறைகள், மருத்துவ மற்றும் பகுப்பாய்வு முறைகள் உள்ளிட்டவற்றிற்கு இந்த சலுகைகளை பெறலாம்.உள்நாட்டு மற்றும் உலகளாவிய சவாலான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில், இந்த மூலோபாய கூட்டாண்மையானது கொமர்ஷல் வங்கி கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு, தாம் கொள்வனவு செய்யும் முழுத் தொகையின் சமமான மாதாந்த தவணைகளில் பணத்தை செலுத்துவதற்கு உதவுகிறது. குறைந்தபட்சம் ரூ. 25,000 முதல் ரூ. 1 மில்லியன் வரையிலான பரிவர்த்தனைகள் இந்த எளிய கட்டணத் திட்டத்திற்குத் தகுதி பெறுகின்றன. ஹேலீஸ் எவன்சுரா (Hayleys Aventura) நிதிப் பணிப்பாளர் திருமதி சஷி ஜயகொடி இது பற்றித் தெரிவிக்கையில், “சவாலான பொருளாதார நிலைமை கொண்ட இந்தக் காலக்கட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு நடைமுறை ரீதியாகவும் அதே சமயம் கட்டுப்படியான வகையிலான விலையிலும் சலுகைகளை வழங்குவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவது மிகவும் அவசியமாக காணப்படுகின்றது.