குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று (22) ஐந்து மணி நேர வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்: தமிழ் மொழியில் வாக்குமூலத்தை வழங்க விரும்புவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் நேற்று முன்தினம் (21) தெரிவித்தேன். இதனால், மொழி பெயர்ப்பை மேற்கொள்வதற்கான நடவடிக்கை இடம்பெறும் என்று குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர். இதையடுத்து இன்று (நேற்று (22)) ஆஜராகுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக செனல் 4 ஆவணப்படத்தில் தனது பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பில்,வாக்குமூலம் பதிவு செய்வதற்காக நேற்று இரண்டாவது நாளாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகினார். இதன் பின்னர் அவர் இந்த விடயங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.