சர்வதேச வர்த்தகச் சட்டத்துக்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவுக்கு (UNCITRAL) இலங்கையும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.ஐ.நா.பொதுச்சபை இதற்காக 31 நாடுகளைத் தெரிவு செய்தது. இந்த ஆணைக்குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கு போட்டியிட்ட இலங்கை 177 வாக்குகளைப் பெற்றது.இக்குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்ட நாடுகளில்,இலங்கை இரண்டாவது அதிக வாக்குகளைப் பெற்றது.
மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம், சீனா, ஜப்பான் மற்றும் கொரிய குடியரசு ஆகிய நாடுகளும், இதற்குத் தெரிவாகின.
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பித்து ஆறு (06) வருட காலத்துக்கு இலங்கை இதில் பணியாற்றும்.
சர்வதேச வர்த்தக சட்த்துக்கான ஐக்கிய நாடுகள் ஆணகை்குழு 1966 இல் நிறுவப்பட்டது. இந்த அமைப்பு வியன்னாவை தலைமையமாகக் கொண்டு இயங்குகிறது. இது சர்வதேச வர்த்தகத் துறையில் முக்கிய சட்ட கட்டமைப்பாகும். வர்த்தகத்துக்கான தடைகளை நீக்குதல் மற்றும் வர்த்தகச் சட்டங்களை ஒத்திசைத்தல் ஆகியவை இதன் ஆணையில் அடங்கும்.
இந்த அமைப்பு,உறுப்பு நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குகிறது.