வ. சிவஜோதியின் 53ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு “யார் எவர் கிளிநொச்சி – தொகுதி II நுாலின் வௌியீட்டு விழா இன்று 2024.11.23 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.45 மணிக்கு கிளிநொச்சி, திருநகர், கனகராசா வீதியிலுள்ள லிற்றில் ரெக் அக்கடமியின் கல்வி பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. லிற்றில் ரெக் அக்கடமியின் மாணவி அன்ரன் ஜீவராஜ் கிறிஸ்டி மிதுஷா வரவேற்புரையாற்ற, முத்துகுமார குருக்கள் சிவ ஸ்ரீ மகேஸ்வரநாத குருக்கள், காவேரிக் கலா மன்றத்தின் இயக்குனர் வண. பிதா சி யோசுவா ஆகியோர் ஆசியுரை வழங்கவுள்ளார்கள்.
ஊடகவியலாளர் மு. தமிழ்ச்செல்வன் தலைமையுரையாற்ற மல்லாகம் பதில் நீதிபதி சோ. தேவராஜா நினைவுப் பேருரை ஆற்றுவார்.
லிற்றில் ரெக் அக்கடமியின் மாணவன் இ. ரேனுசன் அஞ்சலிப்பா இசைக்க சமத்துவ கட்சியின் பொதுச் செயலாளர் முருகேசு சந்திரகுமார் உரையாற்ற யாழ். தொல் விக்னேஸ்வர வித்தியாலயத்தின் ஆசிரியர் கைலாயநாதன் துஸ்யந்தன் நுால் வெளியீடுஉரையாற்றுவார். யாழ் ஐக்கிய வியாபாரச் சங்கத்தின் சி. வயீத்தீஸ்வரன் முதற்பிரதியை வழங்குவார், தொழிலதிபர் வ. பவாநந்தன் முதற்பிரதியை பெற்றுக் கொள்வார். தேசிய புத்திஜீவிகள் அமைப்பின் இணைப்பாளர் டொக்டர் அருள் கோகிலன் நாளைய உலகின் ஆவணப்படுத்தல் என்ற தொனிப்பொருளில் உரையாற்றுவார். தொடர்ந்து மாவை நித்தியானந்தனின் முட்டை என்ற நாடகம் 20ஆவது தடவையாக மேடையேற்றப்படும். அதன்பின் வ. சிவஜோதியின் ஞாபகார்த்த விருது வழங்கப்படும். லிற்றில் ரெக் அக்கடமியின் உதவிப் பணிப்பாளர் பா. கஜீபன் ஏற்புரையாற்ற லிற்றில் ரெக் அக்கடமியின் பணிப்பாளர் திருமதி ஹம்சகௌரி சிவஜோதி நன்றியுரையாற்றுவார்.