தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட தலைமை அலுவலகம் வவுனியாவில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த அலுவலகம், வவுனியா கித்துள் வீதியில் நேற்று (22) திறந்து வைக்கப்பட்டது.
கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன் ஆகியோரால் இந்த அலுவலகம் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியபிரமாணம் செய்துகொண்டவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்து பலர் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(வவுனியா விசேட நிருபர்)