Sunday, November 24, 2024
Home » கிளிநொச்சியில் மரபுசார் உணவுத் திருவிழா

கிளிநொச்சியில் மரபுசார் உணவுத் திருவிழா

by sachintha
November 23, 2024 9:11 am 0 comment

 

கிளிநொச்சியில், மரபுசார் உணவு திருவிழா நடைபெற்று வருகின்றது.

இந் நிகழ்வு VAROD நிறுவனத்தின் ஏற்பாட்டில், கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் நேற்று (22) காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

“மரபுசார் உணவு : மருந்தாகும் விருந்து” எனும் தொனிப்பொருளில் நேற்றும்(22) இன்றும்(23) இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

பாரம்பரிய உணவு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த உணவு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, பாரம்பரிய உணவுகளை உள்ளடக்கிய கண்காட்சி கூடங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன், அவற்றை தயாரிக்கும் முறைகளை உள்ளடக்கிய இந்நிகழ்வில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் Dr.தயாளினி, கிளிநொச்சி மாவட்ட சித்த ஆதார வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் Dr.அ.அரவிந்தன், கரைச்சி பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர், VAROD நிறுவன பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT