பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக நேற்று (21) பதவியேற்றுக்கொண்ட சுந்தரலிங்கம் பீரதீப்புக்கு இ.தொ.கா பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான சுந்தரலிங்கம் பிரதீப், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டமைக்கு வாழ்த்துகின்றேன்.
மேலும், மலையக மக்களின் காணி உரிமை தொடர்பாக பாராளுமன்றத்திலும், தனது அமைச்சினூடாகவும் அதிக கரிசனைகாட்டி நில உரிமையினை பெற்றுக்கொடுக்க முக்கியத்துவம் வழங்குவார் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.