நாட்டில் இனிமேல் இன மத வேறுபாடுகளுக்கு இடமில்லை. நாம் எல்லோரும் இலங்கையர் மட்டும்தான்.
நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழர்கள் முஸ்லிம்கள் எல்லாரும் ஒற்றுமையாக வாக்களித்து வெற்றியடைய வைத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
தமிழரது பகுதிகளில் எனக்கு தமிழில் கதைப்பதற்கு விருப்பம். திருமலையில் கடந்த 35 வருடங்களுக்கு முன் தமிழர்களுடன் இணைந்து வாழ்ந்து வந்தோம். தற்போது மாகாண ஆளுநர் அலுவலகத்தில் அதிகமான நேரங்களில் தமிழில்தான் கடமை களை முன்னெடுத்து வருகின்றேன். நேற்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில், நாட்டில் இனிமேல் இன மத வேறுபாடுகளுக்கு இடமில்லை என்றும், இனிமேல் நாம் எல்லாரும் இலங்கையர் மட்டும்தான், நடந்து முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் தமிழர்கள், முஸ்லிம்கள், எல்லாரும் ஒற்றுமையாக வாக்களித்து வெற்றியடைய வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெரியபோரதீவு தினகரன் நிருபர்