Sunday, November 24, 2024
Home » ரயில் நிலைய மேற்கூரை விழுந்து விபத்து: அமைச்சர் உட்பட 11 பேர் கைது

ரயில் நிலைய மேற்கூரை விழுந்து விபத்து: அமைச்சர் உட்பட 11 பேர் கைது

by sachintha
November 22, 2024 10:29 am 0 comment

செர்பியா ரயில் நிலைய மேற்கூரை விழுந்து ஏற்பட்ட விபத்து குறித்து தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

செர்பியாவின் வடக்கு நகரமான நோவி சாட்டில் கடந்த நவம்பர் முதலாம் திகதி ரயில் நிலைத்தில் இருந்த மேற்கூரை இடிந்து விழுந்ததில் 15 பேர் பலியாகினர். மூவர் கடும் காயங்களுக்கு உள்ளாகினர்.

இவ்விபத்துக்கு காரணமானவர்களைக் கைது செய்யக் கோரி, செர்பியாவில் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தினர். இதற்கிடையே, செர்பியாவின் நிர்மாணத்துறை அமைச்சர் கோரன் வெசிக், தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இந்நிலையில் பொதுப் பாதுகாப்புக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்டது, பொது ஆபத்தை ஏற்படுத்தியது, ஒழுங்கற்ற நிர்மாணப் பணிகள் ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்தன. இக்குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நிர்மாணத் துறை அமைச்சர் கோரன் வெசிக் உட்பட 11 பேரை செர்பிய அரசு கைது செய்துள்ளது.

நோவி சாட்டில் விபத்து நிகழ்ந்த ரயில் நிலையம் 1964 இல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT