பாகிஸ்தானிலுள்ள சுமார் 29 நகர்களின் குடிநீர் மாசடைந்துள்ளதாக அந்நாட்டு நீர்வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாதுகாப்பற்றதும் மாசடைந்ததுமான நீரினால் பாகிஸ்தான் பிள்ளைகள் போஷாக்கின்மை மற்றும் தொற்று நோய் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுப்பதாக யுனிசெப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
குடிநீரின் தூய தன்மையைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ள இந்நிறுவனம், தூய நீரைப் பருக பிள்ளைகளையும் பொது மக்களையும் ஊக்குவிக்கவும் வலியுறுத்தியுள்ளன.
விழிப்புணர்வு நடவடிக்கைகளின் முக்கியத்துவமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் வோட்டர் எய்ட் நிறுவனத்தின் தலைவர் முஹம்மது ஃபசல் தூய நீரை பருகுவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், ‘நீங்கள் பருகும் ஒவ்வொரு கிளாஸ் தண்ணீரும் உங்களை நோய் வாய்ப்படுத்துவதைத் தவிர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்’ என்றுள்ளார்.