கட்டுகஸ்தோட்டையிலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், புத்தகப் பைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
கண்டி நகர் முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் ஜெர்மனி ஹெல்பனின் நிதியுதவியுடன் ஹசன் மௌலவி நற்பணி மன்றத்தின் அசிஷா பவுண்டேஷன் ஊடாக இவ்வுதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.
அந்தவகையில் கட்டுகஸ்தோட்டையிலுள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் புத்தக பைகளும் வழங்கும் நிகழ்வு கட்டுகஸ்தோட்டை சாஹிராக் கல்லூரி மண்டபத்தில் அதிபர் கலில்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஹஸன் மௌலவி நற்பணி மன்றத்தின் அசிஷா பவுண்டேஷன் பணிப்பாளர் சாதிக் ஹசன் கலந்து கொண்டதுடன் கண்டி முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.எச். சலீம்டீன். உப தலைவர் பாசில் , உப தலைவர் ரீஷா வாஹிட், பொருளாளர் ஏ. டப்ளியூ ஃ ஏ. ரஷீட் செயற்குழு உறுப்பினர் சப்ராஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மாவத்தகம தினகரன் நிருபர்