இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது சுற்றுப்பயணத்தின் 3ஆவது கட்டமாக கயானா சென்றார். தலைநகர் ஜார்ஜ் டவுன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கயானா ஜனாதிபதி முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் உள்ள புரோமெனிடா பூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, அங்குள்ள சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள மாணவர்கள் வந்தே மாதரம் மற்றும் தேசபக்திப் பாடல்களைப் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர்.
இந்நிலையில்,ஜனாதிபதி முகமது இர்பான் அலி மற்றும் பிரதமர் மோடி கயானாவில் உள்ள மே.தீவுகள் அணி கிரிக்கெட் வீரர்களைச் சந்தித்துப் பேசினர். அவர்கள் பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் துடுப்பாட்ட மட்டையை பரிசாக அளித்தனர். அப்போது பேசிய அவர், இரு நாடுகளையும் கிரிக்கெட் இணைத்துள்ளது என தெரிவித்தார்.