மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ் அபேகோனுக்கும் இலங்கைக்கான கொரியக் குடியரசு தூதுவர் திருமதி. மியோன் லீ (Mrs Miyon Lee) ஆகியோருக்கிடையில் நட்பு ரீதியான சந்திப்பொன்று கண்டியிலுள்ள மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கிடையில் காணப்படும் நட்புறவு, கல்வி கலாசார, சமய, விஞ்ஞான தொழில் நுட்பத்துறைகள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் இலங்கையில் கொரியா மேற்கொண்டுள்ள முதலீடுகள் தொடர்பாகவும், கொரியாவில் இலங்கையருக்கான தொழில் வாய்ப்பு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இருவருக்குமிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறப்பட்டன. ஆளுநர் செயலாளர் மஞ்சுலா மடஹபொலயும் இச்சந்திப்பில் பங்கு கொண்டார்.
அக்குறணை குறூப் நிருபர்