அரச மற்றும் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் சூரிய சக்தி மின்சார திட்டம் சப்ரகமுவ மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.
அரச மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்த சூரிய சக்தி மின்திட்டத்தை பயன்படுத்தி 300 மெகா வோல்ட் தேசிய மின் அமைப்புடன் சேர்க்கப்படும் திட்டம் சப்ரகமுவ மாகாணத்தில் நடைமுறைப்பட்டுள்ளது.
இதன் முதலாவது மின்சார விநியோக திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வு அண்மையில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தலைமையில் இரத்தினபுரி குமர வித்தியாலய வளாகத்தில் நடைபெற்றது.
மேற்படி சூரிய மின் உற்பத்தி திட்டம் தற்போது சப்ரகமுவ, ஊவா, தென், வடமத்திய, வடமேல், மத்திய, மேல் ஆகிய ஏழு மாகாணங்களை மையமாகக் கொண்டு அந்தந்த மாகாணங்கள் மற்றும் GAIA GREEN ENERAY HOLDINGS நிறுவனம் இணைந்து அரச மற்றும் தனியார் பங்களிப்பு திட்டமாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.
மாகாணத்திலுள்ள பாடசாலைகள், வைத்தியசாலைகள் உட்பட அரச கட்டடத் தொகுதிகளின் மேல் கூரைகளில் சூரிய சக்தி சோலர் பெனல்கள் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றன.
இதற்கான செலவுகளை GAIA GREEN ENERAY HOLDINGS நிறுவனத்தின் மூலம் 200 டொலர் ஒதுக்கிடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன, சப்ரகமுவ மாகாண பிரதான செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய, இரத்தினபுரி மாவட்ட செயலாளர் வசந்த குனரத்ன, சப்ரகமுவ மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஈ.கே.ஏ.சுனீத்தா உட்பட முக்கிய அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
காவத்தை தினகரன் விசேட நிருபர்