38
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் நேற்றுமுன்தினம் நீரிழிவு விழிப்புணர்வு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. யாழ்ப்பாண நீரிழிவுக்கழகத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ். போதனா வைத்தியசாலை நீரிழிவு நோய் வைத்திய நிபுணர் டொக்டர். அரவிந்தன் அதிதி பேச்சாளராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வுக்கு கோப்பாய் கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமை தாங்கினார்.
நீரிழிவு கழகம் பற்றிய அறிமுக உரையை கழகத்தின் செயலாளர் க. கணபதி ஆற்றினார். முதலாம் வருட ஆரம்பப்பிரிவு ஆசிரிய மாணவன் நா.இராசநாதன் நிகழ்வுகளை முன்னிலைப்படுத்தினார்.
ஆரம்பப்பிரிவு ஆசிரிய மாணவி திருமதி.ர.தேவமணி ‘நோயற்ற வாழ்வு’ எனும் பொருளில் விசேட உரை நிகழ்த்தினார்.