Sunday, November 24, 2024
Home » தென்னாபிரிக்க வீரர் கோட்சிக்கு அபராதம்
'வைட்' பிடித்ததால் அதிருப்தி:

தென்னாபிரிக்க வீரர் கோட்சிக்கு அபராதம்

by sachintha
November 21, 2024 8:19 am 0 comment

ஜோஹன்னஸ்பர்க்கில் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியின்போது நடுவரின் முடிவில் அதிருப்தி தெரிவித்ததற்காக தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்சிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற இந்தப் போட்டியில் 15 ஆவது ஓவரை வீசிய கோட்சி நடுவர் ‘வைட்’ கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து முறையிட்டதாக கூறப்படுகிறது.

சர்வதேச போட்டியின்போது நடுவர்களின் முடிவில் கருத்து வேறுபாடு கூறுவது தொடர்பான ஐ.சி.சி. நடத்தை விதி 2.8 ஐ மீறியது கண்டறியப்பட்டு அவருக்கு இரண்டு தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

24 வயதான கோட்சி குற்றத்தை ஒப்புக்கொண்டதால் போட்டிக் கட்டணத்தில் இருந்து அவருக்கு 50 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கள நடுவர்கள், மூன்றாவது மற்றும் நான்காவது நடுவர்கள் பந்து வீச்சாளர் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த விதியின்படி ஒரு வீரரின் போட்டிக் கட்டணத்தில் அதிகபட்சமாக 50 வீதம் அபராதம் மற்றும் இரண்டு தகுதியிழப்பு புள்ளிகள் வழங்கப்படும்.

24 மாதத்துக்குள் ஒரு வீரர் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியிழப்பு புள்ளிகளை பெற்றால், அவர் விளையாட தடை செய்யப்படுவார்.

இந்த டி20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 283 ஓட்டங்களை விளாசிய நிலையில் 135 ஓட்டங்களால் வெற்றியீட்டி நான்கு போட்டிகளைக் கொண்ட தொடரையும் 3–1 என கைப்பற்றியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT