கொழும்பில் நடைபெற்ற உலகளாவிய டிஜிட்டல் சுகாதார மாநாட்டில் பங்குபற்ற இலங்கைக்கு விஜயம் செய்த கென்யா நாட்டின் சுகாதார அமைச்சின் டிஜிட்டல் ஹெல்த் ஏஜென்ஸியின் தலைவர் சைலத் சிமாத்வோ (Silas Simatwo, Chairman of Digital Health Agency of Kenya) பேருவளைக்கு அண்மையில் வருகை தந்தார்.
பேருவளை ஜாமியா நளீமிய்யா கலாபீடம் உட்பட வரலாற்றுப் பிரசித்தி பெற்ற பகுதிகளுக்கும் இவர் விஜயம் செய்தார். நளீமிய்யா கலாபீடத்தை சுற்றிப் பார்வையிட்ட அவர், இலங்கை முஸ்லிம்களுக்காக உயர்கல்வி பெறுவதற்கு மர்ஹும் நளீம் ஹாஜியாரினால் அமைக்கப்பட்டதை அவர் பாராட்டினார்.
இவருடன் சமூக சேவையாளர் இஸ்மத் ராஸிக் மற்றும் மின்னாத் அலி, இஸ்பஹான் ஷாபி ஆகியோரும் சென்றிருந்தனர்.
(பேருவளை விசேட நிருபர்)