Sunday, November 24, 2024
Home » முப்பது ஆண்டுகால திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது!

முப்பது ஆண்டுகால திருமண வாழ்வு முடிவுக்கு வந்தது!

-ஏ.ஆர். ரகுமான் தம்பதி விவாகரத்து!

by sachintha
November 21, 2024 6:40 am 0 comment

இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான் தனது மனைவியைப் பிரிவதாக அறிவித்தது தேசிய அளவில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. சுமார் 30 ஆண்டு திருமண உறவை அவர்கள் முறித்துக் கொண்டுள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மானிடம் இருந்து பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இதன்மூலம் 29 ஆண்டுக்கு மேற்பட்டகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்தத் தம்பதிக்கு கதிஜா, ரஹிமா என்ற மகள்மார் உள்ளனர். அதேபோல் அமீன் என்ற மகன் உள்ளார்.

சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர். ரஹ்மானை பிரிவதாக அவரது வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு தனது கணவர் ரஹ்மானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். சட்ட ரீதியாக இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். வாழ்வில் ஏற்பட்ட வேதனை மற்றும் வலியின் காரணமாக பிரிவு முடிவை எடுத்ததாக சாய்ரா விளக்கம் அளித்துள்ளார்.

இரண்டு தரப்பிற்கும் ஏற்பட்ட மனக்கஷ்டங்கள், பிரிவினைகள் காரணமாக இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததே இந்தப் பிரிவுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. இவர்களது திருமண உறவு வெளியே சுமுகமாக இருந்தாலும் உள்ளே நிறைய மனக்கசப்பு இருந்துள்ளது.

இரண்டு பேருக்கும் இடையில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் குடும்பத்தில் நிம்மதி குறைந்துள்ளது. அத்தோடு ஏ. ஆர். ரகுமான் பெரும்பாலும் அதிக நேரத்தை சினிமா பணியில் கவனம் செலுத்தி உள்ளார். இதனால் அவரால் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த முடியவில்லை. முக்கியமாக சமீபத்தில் அதிக அளவில் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் காரணமாக இரண்டு தரப்பிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த பெரிய சண்டைதான் இவர்களின் விவாகரத்திற்கு முக்கியமான காரணமாக மாறிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்பே இவர்கள் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளனர். தங்கள் மகள்கள், மகன் ஆகியோருடன் ஆலோசனை செய்து அதன்பின்பே பிரியும் முடிவை எடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT