திறப்பனை பிரதேச செயலகம் மற்றும் கலாசார அலுவலர்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்திய திறப்பனை பிரதேச சாகித்திய விழா திறப்பனை பிரதேச செயலாளர் கே.பி.கே.எல்.பி மதுவந்தி தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் மிக சிறப்பாக இடம் பெற்றது.
இங்கு பிரதேசத்தில் உள்ள முஸ்லிம், சிங்கள, தமிழ் பாடசாலை மாணவர்களின் இலக்கியத்திறனை விருத்தி செய்யும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றன. இதன் போது பிரதேச பாடசாலைகளின் மாணவர்களால் நடாத்தப்பட்ட வண்ணமயமான நடன நிகழ்ச்சிகளையும் இது உள்ளடக்கியிருந்தது.
விழாவின்போது பிரதேசம் முழுவதும் சிதரிக் கிடக்கும் கலைஞர்களின் இலக்கியத்திறனை மதிப்பிடும் வகையில், இவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் இங்கு வழங்கிவைக்கப்பட்டன. இந் நிகழ்வில் திறப்பனை பிரதேச செயலாளர் திருமதி மதுவந்தி மற்றும் உத்தியோகத்தர்கள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் உட்பட அதிகமானோர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
திறப்பனை தினகரன் நிருபர்