கவிஞரும் எழுத்தாளருமான கலாபூஷணம் மஸீதா அன்ஸார் எழுதிய “நானல்ல நீ” கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை
மாலை 3.30 மணிக்கு கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெறும்.
களுத்துறைக் கிளை முஸ்லிம் ஜனாஸா சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இவ் விழாவுக்கு வலம்புரி கவிதா வட்டத் தலைவர் என். நஜ்முல் ஹுசைன் தலைமை தாங்குவார்.
பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் கலந்து கொள்கிறார். வகவ சிரேஷ்ட ஸ்தாபகர் சத்திய எழுத்தாளர் கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கனி முன்னிலை வகிக்கிறார். கௌரவ அதிதிகளாக இலங்கை ஜனாஸா சேவை சங்கத் தலைவர் வைத்தியர் எம்.எம்.முஸ்னி, எம்.எஸ்.எம். ஜிப்ரி, ஜனாஸா சேவைச் சங்க ஸ்தாபகர், பேருவளை பிரதேசச் செயலக சமுர்த்தி கணக்குப் பிரிவு அதிகாரியும், களுத்துறைக் கிளை ஜனாஸா சேவை சங்கத் தலைவருமான எம்.எம்.எம். ஷியான், இசைக்கோகிலம் நூர்ஜஹான் மர்சூக், முன்னாள் காதி நீதிபதி மற்றும் ஓய்வு பெற்ற முஸ்லிம் சமய, கலாசாரத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளர் கலாபூஷணம் ஜே. மீரா மொஹிதீன், முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் எம்.ஸீ. எம். ஜிப்ரி, கவிஞர் திலகம் பிரேம்ராஜ், பாரம்பரியம் புகழ் எம் எஸ். எம். ஜின்னா, முஸ்லிம் சேவை சிரேஷ்ட தயாரிப்பாளர்
ஏ.எம்.எம், ரழீம், ஓய்வுநிலை அதிபர் கலாபூஷணம் கஸ்ஸாலி அஷ்ஷம்ஸ், தேசிய தொலைக்காட்சி தயாரிப்பாளர் முபாரக் மொஹிதீன்,கலாபூஷணம் ஸக்கியா சித்தீக் பரீத் எழுத்தாளர், மௌண்ட் ஹிரா சர்வதேசப் பாடசாலை அதிபர்
மௌலவியா குத்ஸியா தௌபிக், இலங்கை வானொலி முஸ்லிம் சேவைத் தயாரிப்பாளர் பாத்திமா ரினூஸியா ஆகியோர் பங்கேற்பர்.
நூலின் முதல் பிரதியை கனடா தமிழ் மொழி தொலைக்காட்சி இலங்கைக் கிளைத் துணைச் செயலாளரும், சாஹித்திய விருது பெற்றவருமான வகவக் கவிஞர் வாசுகி வாசு பெறுகிறார்.
நூலாய்வினை இலக்கியச் செம்மல் சட்டத்தரணி கலாபூஷணம் ரஷீத் எம். இம்தியாஸ் மேற்கொள்வார்.
வரவேற்புரையை டி.எஸ். எஸ்.சேனாநாயக்க கல்லூரி ஆசிரியர் இர்ஷாத் ஹுசைன் நிகழ்த்த, ஆசியுரையை கலாபூஷணம் தமிழ்த் தென்றல் அலி அக்பரும் வாழ்த்துரையை சிரேஷ்ட வானொலிக்கலைஞர், அறிவிப்பாளர், புர்கான் பீ. இப்திகார் ஆகியோர் வழங்குவர்.
கவி வாழ்த்தினை வகவப் பொருளாளர் ஈழகணேஷ், முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர், கவிஞர் கலைமதி யாசீன், முன்னாள் அரசாங்க தகவல் திணக்கள தகவல் அதிகாரி கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன், வானொலி அறிவிப்பாளர், கவிஞர் லைலா அக்ஷியா ஆகியோர் நிகழ்த்துவர். “யார் இந்த மஸீதா ?” – என சந்தக்கவிமணி கிண்ணியா அமீர் அலி உரையாற்றுவார் வகவச் செயலாளர் இளநெஞ்சன் முர்ஷிதீன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்.