சுனாமி அனர்த்தத்தினால் முற்றாக துவம்சம் செய்யப்பட்ட இஸ்லாமாபாத் பிரதேச மக்கள் நலன் கருதி முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரஃபினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலகோடிரூபா செலவில் தொடர்மாடி வீட்டுத்திட்டம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஆற்றுப்படுத்த சிறுவர் பூங்கா வொன்றும் அமைக்கப்பட்டது. அந்த சிறுவர் பூங்கா தற்போது சிறுவர் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
அக்காலப்பகுதியில் மாணவர் கல்வியும் முற்றாக செயலிழந்து காணப்பட்டது. உள்ளூர் வெளியூர் தன்னார்வ நிறுவனங்களினால் இழந்த கல்வியை மேம்படுநத்த பிரத்தியேக விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
தன்னார்வ நிறுவனமான கோல் கல்விக்கென பாடசாலையொன்றையும் அமைத்துக் கொடுத்தது. தற்போது கல்விப்பொதுத்தராதரப் பத்திர உயர்தர வகுப்புவரை இங்கு கல்வி போதிக்கப்படுகிறது. புல் பூண்டு செடிகள் வளர்ந்து சிறுவர்கள் விளையாட முடியாத நிலைக்குள்ளாகியுள்ளது.அங்கு செல்லவும் சிறுவர்கள் அச்சமடைகின்றனர் மிக அத்தியாவசியமான இக்குறைபாட்டை நீக்க அதிகாரிகள் உடன் ஆவன செய்வார்களா எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
நற்பிட்டிமுனை தினகரன் நிருபர்