Sunday, November 24, 2024
Home » முன்னாள் எம்.பி ஸ்ரீரங்கா சிஐடியில் வாக்குமூலம்
சுஜீவ சேனசிங்கவின் வாகன விவகாரம்

முன்னாள் எம்.பி ஸ்ரீரங்கா சிஐடியில் வாக்குமூலம்

by sachintha
November 21, 2024 6:20 am 0 comment

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க பயன்படுத்திய வாகனம் தொடர்பில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலமொன்றை வழங்கியுள்ளார். சி.ஐ.டி.யில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 2014 ஆம் ஆண்டு தமது வாகன அனுமதிப் பத்திரத்தை வர்த்தகர்களுக்கு தாம், வழங்கவில்லை என்றும் விபத்திற்குள்ளான தமது வாகனத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவிற்கு வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு 2014 ஆம் ஆண்டு வழங்கிய வாகனம் தொடர்பிலேயே, நேற்றைய தினம் தம்மிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT