தாய்வானின் கடற்பரப்புக்குள் அத்துமீறிப் பிரவேசிப்பதை நிறுத்துவதற்கு முன்வருமாறு சீனாவிடம் தாய்வான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் தாய்வான் கரையோரக் காவல் படை விடுத்துள்ள அறிக்கையில், சீனாவின் கரையோரக் காவல் படைக்கப்பல்கள் தாய்வானின் கின்மென் கவுண்டி தீவுக்குரிய கடற்பரப்பிற்குள் அடிக்கடி பிரவேசிக்கிறது. இது தாய்வானின் கடல்சார் பாதுகாப்பையும் இறைமையையும் மீறும் வகையில் அமைகின்றன.
இத்தகைய செயற்பாடுகள் இரு நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை மேலும் ஆழமாக்கவே வழிவகுக்கும். இது எந்தவொரு சாத்தியமான உரையாடலையும் கடினமாக்கும். அதனால் தாய்வான் கடற்பரப்புக்குள் ஊடுருவல்களை நிறுத்த சீனா முன் வரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கின்மென் கவுண்டி தீவானது சீனாவின் ஜியாமென் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. அதனால், கின்மெனைச் சுற்றியுள்ள கடற்பரப்பு சீன பிராந்தியத்திற்கு உட்பட்டதாகக் கருதப்படுகின்றது.